Tags

, ,

ஶ்ரீ ராம அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்திரம் :

பாத்ம புராணத்தின் படி, பரமேச்வரர், பார்வதி தேவிக்கு பகவான் ஶ்ரீ ஹரியினது பெருமைகளையும், வைஷ்ணவ தர்மத்தைப் பற்றியும் கூறுகிறார். அதைக் கேட்ட பின், பார்வதி தேவியும் பெருமாளின் மீது பக்தி கொண்டு ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை ஸ்தோத்திரம் செய்து பின்னரே உணவருந்துவது என்று கொண்டிருந்தார்.

ஒரு சமயம் பரமேச்வரர் உணவருந்த வந்தபோது தேவியையும் அழைத்தார். தேவி கூறினாள், ‘ நாதா ! நான் ஸஹஸ்ரநாமம் பாடம் செய்த பின்னரே உணவருந்துவேன். அதற்குள்ளாக தாங்கள் உணவருந்தலாமே ‘ என்று. அதற்கு பரமேச்வரரும், ‘ மிகுந்த புண்ணியம் செய்தோருக்கல்லவா ஹரிபக்தி உண்டாகும்.

யாமும் ராம ! ராம ! ராம ! என்று ராம நாமத்திலேயே மனம் ரமித்தபடி இருக்கிறேன். ராம நாமம் ஆயிரம் நாமங்களுக்கும் சமமானது. நீயும் ராம நாமத்தை உச்சரித்து என்னுடன் உணவருந்தலாமே ! ‘ என்றார். இதைக் கேட்ட தேவியும் அவ்வாறே செய்தாள். பின் ராமரது ஏனைய பிற நாமங்களையும் பற்றிக் கூறுமாறு பரமேச்வரரிடம் வேண்டினாள். அப்போது பரமேச்வரர் ராமரது நூற்றியெட்டு நாமங்களைப் பற்றிக் கூறினார். அதுவே இந்த ராம அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்திரம்.

இது பத்ம புராணத்தில், உத்தர காண்டத்தில், 254 வது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது.

॥ श्री रामाष्टोत्तरशतनाम स्तोत्रम्  ॥

ध्यानम् –
श्रीराघवं दशरथात्मजमप्रमेयं
       सीतापतिं रघुकुलान्वयरत्नदीपम् ।
आजानुबाहुमरविन्ददलायताक्षं
       रामं निशाचरविनाशकरं नमामि ॥

वैदेहीसहितं सुरद्रुमतले हैमे महामण्डपे
       मध्ये पुष्पकमासने मणिमये वीरासने सुस्थितम् ।
अग्रे वाचयति प्रभञ्जनसुते तत्त्वं मुनिभ्यः परं
       व्याख्यान्तं भरतादिभिः परिवृतं रामं भजे श्यामलम् ॥

रामाय रामभद्राय रामचन्द्राय वेधसे ।
रघुनाथाय नाथाय सीतायाः पतये नमः ॥

ॐ श्रीरामो रामभद्रश्च रामचन्द्रश्च शाश्वतः ।
राजीवलोचनः श्रीमान् राजेन्द्रो रघुपुङ्गवः ॥ १॥

जानकीवल्लभो जैत्रो जितामित्रो जनार्दनः ।
विश्वामित्रप्रियो दान्तः शत्रुजिच्छत्रुतापनः ॥ २॥

वालिप्रमथनो वाग्मी सत्यवाक् सत्यविक्रमः ।
सत्यव्रतो व्रतधरः सदा हनुमदाश्रितः ॥ ३॥

कौसलेयः खरध्वंसी विराधवधपण्डितः ।
विभीषणपरित्राता हरकोदण्डखण्डनः ॥ ४॥

सप्ततालप्रभेत्ता च दशग्रीवशिरोहरः ।
जामदग्न्यमहादर्पदलनस्ताटकान्तकः ॥ ५॥

वेदान्तसारो वेदात्मा भवरोगस्य भेषजम् ।
दूषणत्रिशिरो हन्ता त्रिमूर्तिस्त्रिगुणात्मकः ॥ ६॥

त्रिविक्रमस्त्रिलोकात्मा पुण्यचारित्रकीर्तनः ।
त्रिलोकरक्षको धन्वी दण्डकारण्यपावनः ॥ ७॥

अहल्याशापशमनः पितृभक्तो वरप्रदः ।
जितेन्द्रियो जितक्रोधो जितामित्रो जगद्गुरुः ॥ ८॥

ऋक्षवानरसंघाती चित्रकूटसमाश्रयः ।
जयन्तत्राणवरदः सुमित्रापुत्रसेवितः ॥ ९॥

सर्वदेवादिदेवश्च मृतवानरजीवनः ।
मायामारीचहन्ता च महादेवो महाभुजः ॥ १०॥

सर्वदेवस्तुतः सौम्यो ब्रह्मण्यो मुनिसंस्तुतः ।
महायोगी महोदारः सुग्रीवेप्सितराज्यदः ॥ ११॥

सर्वपुण्याधिकफलः स्मृतसर्वाघनाशनः ।
आदिदेवो महादेवो महापूरुष एव च ॥ १२॥

पुण्योदयो दयासारः पुराणपुरुषोत्तमः ।
स्मितवक्त्रो मिताभाषी पूर्वभाषी च राघवः ॥ १३॥

अनन्तगुणगम्भीरो धीरोदात्तगुणोत्तमः ।
मायामानुषचारित्रो महादेवादिपूजितः ॥ १४॥

सेतुकृज्जितवारीशः सर्वतीर्थमयो हरिः ।
श्यामाङ्गः सुन्दरः शूरः पीतवासा धनुर्धरः ॥ १५॥

सर्वयज्ञाधिपो यज्वा जरामरणवर्जितः ।
शिवलिङ्गप्रतिष्ठाता सर्वावगुणवर्जितः ॥ १६॥

परमात्मा परं ब्रह्म सच्चिदानन्दविग्रहः ।
परं ज्योतिः परंधाम पराकाशः परात्परः ॥ १७॥

परेशः पारगः पारः सर्वदेवात्मकः परः ॥

॥ इति श्रीरामाष्टोत्तरशतनामस्तोत्रं सम्पूर्णम् ॥

॥ ஶ்ரீ ராமாஷ்டோத்தரஶதநாம ஸ்தோத்ரம் ॥

த்⁴யானம் –
ஶ்ரீராக⁴வம்ʼ த³ஶரதா²த்மஜமப்ரமேயம்ʼ
ஸீதாபதிம்ʼ ரகு⁴குலான்வயரத்நதீ³பம் ।
ஆஜானுபா³ஹுமரவிந்த³த³லாயதாக்ஷம்ʼ
ராமம்ʼ நிஶாசரவிநாஶகரம்ʼ நமாமி ॥

வைதே³ஹீஸஹிதம்ʼ ஸுரத்³ருமதலே ஹைமே மஹாமண்ட³பே
மத்⁴யே புஷ்பகமாஸனே மணிமயே வீராஸனே ஸுஸ்தி²தம் ।
அக்³ரே வாசயதி ப்ரப⁴ஞ்ஜனஸுதே தத்த்வம்ʼ முனிப்⁴ய꞉ பரம்ʼ
வ்யாக்²யாந்தம்ʼ ப⁴ரதாதி³பி⁴꞉ பரிவ்ருʼதம்ʼ ராமம்ʼ ப⁴ஜே ஶ்யாமலம் ॥

ராமாய ராமப⁴த்³ராய ராமசந்த்³ராய வேத⁴ஸே ।
ரகு⁴நாதா²ய நாதா²ய ஸீதாயா꞉ பதயே நம꞉ ॥

ௐ ஶ்ரீராமோ ராமப⁴த்³ரஶ்ச ராமசந்த்³ரஶ்ச ஶாஶ்வத꞉ ।
ராஜீவலோசன꞉ ஶ்ரீமான் ராஜேந்த்³ரோ ரகு⁴புங்க³வ꞉ ॥ 1॥

ஜானகீவல்லபோ⁴ ஜைத்ரோ ஜிதாமித்ரோ ஜனார்த³ன꞉ ।
விஶ்வாமித்ரப்ரியோ தா³ந்த꞉ ஶத்ருஜிச்ச²த்ருதாபன꞉ ॥ 2॥

வாலிப்ரமத²னோ வாக்³மீ ஸத்யவாக் ஸத்யவிக்ரம꞉ ।
ஸத்யவ்ரதோ வ்ரதத⁴ர꞉ ஸதா³ ஹனுமதா³ஶ்ரித꞉ ॥ 3॥

கௌஸலேய꞉ க²ரத்⁴வம்ʼஸீ விராத⁴வத⁴பண்டி³த꞉ ।
விபீ⁴ஷணபரித்ராதா ஹரகோத³ண்ட³க²ண்ட³ன꞉ ॥ 4॥

ஸப்ததாலப்ரபே⁴த்தா ச த³ஶக்³ரீவஶிரோஹர꞉ ।
ஜாமத³க்³ன்யமஹாத³ர்பத³லனஸ்தாடகாந்தக꞉ ॥ 5॥

வேதா³ந்தஸாரோ வேதா³த்மா ப⁴வரோக³ஸ்ய பே⁴ஷஜம் ।
தூ³ஷணத்ரிஶிரோ ஹந்தா த்ரிமூர்திஸ்த்ரிகு³ணாத்மக꞉ ॥ 6॥

த்ரிவிக்ரமஸ்த்ரிலோகாத்மா புண்யசாரித்ரகீர்தன꞉ ।
த்ரிலோகரக்ஷகோ த⁴ன்வீ த³ண்ட³காரண்யபாவன꞉ ॥ 7॥

அஹல்யாஶாபஶமன꞉ பித்ருʼப⁴க்தோ வரப்ரத³꞉ ।
ஜிதேந்த்³ரியோ ஜிதக்ரோதோ⁴ ஜிதாமித்ரோ ஜக³த்³கு³ரு꞉ ॥ 8॥

ருʼக்ஷவானரஸங்கா⁴தீ சித்ரகூடஸமாஶ்ரய꞉ ।
ஜயந்தத்ராணவரத³꞉ ஸுமித்ராபுத்ரஸேவித꞉ ॥ 9॥

ஸர்வதே³வாதி³தே³வஶ்ச ம்ருʼதவானரஜீவன꞉ ।
மாயாமாரீசஹந்தா ச மஹாதே³வோ மஹாபு⁴ஜ꞉ ॥ 10॥

ஸர்வதே³வஸ்துத꞉ ஸௌம்யோ ப்³ரஹ்மண்யோ முநிஸம்ʼஸ்துத꞉ ।
மஹாயோகீ³ மஹோதா³ர꞉ ஸுக்³ரீவேப்ஸிதராஜ்யத³꞉ ॥ 11॥

ஸர்வபுண்யாதி⁴கப²ல꞉ ஸ்ம்ருʼதஸர்வாக⁴நாஶன꞉ ।
ஆதி³தே³வோ மஹாதே³வோ மஹாபூருஷ ஏவ ச ॥ 12॥

புண்யோத³யோ த³யாஸார꞉ புராணபுருஷோத்தம꞉ ।
ஸ்மிதவக்த்ரோ மிதாபா⁴ஷீ பூர்வபா⁴ஷீ ச ராக⁴வ꞉ ॥ 13॥

அனந்தகு³ணக³ம்பீ⁴ரோ தீ⁴ரோதா³த்தகு³ணோத்தம꞉ ।
மாயாமானுஷசாரித்ரோ மஹாதே³வாதி³பூஜித꞉ ॥ 14॥

ஸேதுக்ருʼஜ்ஜிதவாரீஶ꞉ ஸர்வதீர்த²மயோ ஹரி꞉ ।
ஶ்யாமாங்க³꞉ ஸுந்த³ர꞉ ஶூர꞉ பீதவாஸா த⁴னுர்த⁴ர꞉ ॥ 15॥

ஸர்வயஜ்ஞாதி⁴போ யஜ்வா ஜராமரணவர்ஜித꞉ ।
ஶிவலிங்க³ப்ரதிஷ்டா²தா ஸர்வாவகு³ணவர்ஜித꞉ ॥ 16॥

பரமாத்மா பரம்ʼ ப்³ரஹ்ம ஸச்சிதா³னந்த³விக்³ரஹ꞉ ।
பரம்ʼ ஜ்யோதி꞉ பரந்தா⁴ம பராகாஶ꞉ பராத்பர꞉ ॥ 17॥

பரேஶ꞉ பாரக³꞉ பார꞉ ஸர்வதே³வாத்மக꞉ பர꞉ ॥

॥ இதி ஶ்ரீராமாஷ்டோத்தரஶதநாமஸ்தோத்ரம்ʼ ஸம்பூர்ணம் ॥

॥ Śrī Rāmāṣṭottaraśatanāma Stotram  ॥

dhyānam –
śrīrāghavaṃ daśarathātmajamaprameyaṃ
       sītāpatiṃ raghukulānvayaratnadīpam ।
ājānubāhumaravindadalāyatākṣaṃ
       rāmaṃ niśācaravināśakaraṃ namāmi ॥

vaidehīsahitaṃ suradrumatale haime mahāmaṇḍape
       madhye puṣpakamāsane maṇimaye vīrāsane susthitam ।
agre vācayati prabhañjanasute tattvaṃ munibhyaḥ paraṃ
       vyākhyāntaṃ bharatādibhiḥ parivṛtaṃ rāmaṃ bhaje śyāmalam ॥

rāmāya rāmabhadrāya rāmacandrāya vedhase ।
raghunāthāya nāthāya sītāyāḥ pataye namaḥ ॥

oṃ śrīrāmo rāmabhadraśca rāmacandraśca śāśvataḥ ।
rājīvalocanaḥ śrīmān rājendro raghupuṅgavaḥ ॥ 1॥

jānakīvallabho jaitro jitāmitro janārdanaḥ ।
viśvāmitrapriyo dāntaḥ śatrujicchatrutāpanaḥ ॥ 2॥

vālipramathano vāgmī satyavāk satyavikramaḥ ।
satyavrato vratadharaḥ sadā hanumadāśritaḥ ॥ 3॥

kausaleyaḥ kharadhvaṃsī virādhavadhapaṇḍitaḥ ।
vibhīṣaṇaparitrātā harakodaṇḍakhaṇḍanaḥ ॥ 4॥

saptatālaprabhettā ca daśagrīvaśiroharaḥ ।
jāmadagnyamahādarpadalanastāṭakāntakaḥ ॥ 5॥

vedāntasāro vedātmā bhavarogasya bheṣajam ।
dūṣaṇatriśiro hantā trimūrtistriguṇātmakaḥ ॥ 6॥

trivikramastrilokātmā puṇyacāritrakīrtanaḥ ।
trilokarakṣako dhanvī daṇḍakāraṇyapāvanaḥ ॥ 7॥

ahalyāśāpaśamanaḥ pitṛbhakto varapradaḥ ।
jitendriyo jitakrodho jitāmitro jagadguruḥ ॥ 8॥

ṛkṣavānarasaṃghātī citrakūṭasamāśrayaḥ ।
jayantatrāṇavaradaḥ sumitrāputrasevitaḥ ॥ 9॥

sarvadevādidevaśca mṛtavānarajīvanaḥ ।
māyāmārīcahantā ca mahādevo mahābhujaḥ ॥ 10॥

sarvadevastutaḥ saumyo brahmaṇyo munisaṃstutaḥ ।
mahāyogī mahodāraḥ sugrīvepsitarājyadaḥ ॥ 11॥

sarvapuṇyādhikaphalaḥ smṛtasarvāghanāśanaḥ ।
ādidevo mahādevo mahāpūruṣa eva ca ॥ 12॥

puṇyodayo dayāsāraḥ purāṇapuruṣottamaḥ ।
smitavaktro mitābhāṣī pūrvabhāṣī ca rāghavaḥ ॥ 13॥

anantaguṇagambhīro dhīrodāttaguṇottamaḥ ।
māyāmānuṣacāritro mahādevādipūjitaḥ ॥ 14॥

setukṛjjitavārīśaḥ sarvatīrthamayo hariḥ ।
śyāmāṅgaḥ sundaraḥ śūraḥ pītavāsā dhanurdharaḥ ॥ 15॥

sarvayajñādhipo yajvā jarāmaraṇavarjitaḥ ।
śivaliṅgapratiṣṭhātā sarvāvaguṇavarjitaḥ ॥ 16॥

paramātmā paraṃ brahma saccidānandavigrahaḥ ।
paraṃ jyotiḥ paraṃdhāma parākāśaḥ parātparaḥ ॥ 17॥

pareśaḥ pāragaḥ pāraḥ sarvadevātmakaḥ paraḥ ॥

॥ iti śrīrāmāṣṭottaraśatanāmastotraṃ sampūrṇam ॥

இந்த ஸ்தோத்திரத்தை பாடம் செய்து படிப்பதால் ஏற்படும் பலன்களைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

இவையே ஶ்ரீ ராமச்சந்திரரது நூற்றியெட்டு நாமங்களாகும்.

இரகசியத்திலும் இரகசியமான இதனை, தேவி ! உன் மீதுள்ள பிரியத்தின் காரணமாக கூறப்பட்டது.
பக்தி உள்ளத்துடன் யார் இந்த ஸ்தோத்திரத்தை படிக்கிறார்களோ, கேட்கிறார்களோ, நூறுகல்பகோடி காலங்களாக ஏற்பட்ட எல்லா பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனுக்கு நீரும் நிலமாகிவிடுகிறது; சத்ருக்கள் மித்ரர்களாகவும், அரசர்கள் தாசர்களாகவும், எரிநெருப்பு இதமாகவும் மாறிவிடுகின்றன.
பூதங்கள் அனுகூலமாகவும், நில்லாத செல்வங்கள் நீங்காதமையவும் செய்கின்றன.

பக்தி பாவனையுடன் படிக்குமவர்க்கு கிரஹங்கள் அனுகிரஹம் செய்கின்றன, உபத்திரவங்கள் தீர்வடைகின்றன.

பரமபக்தியுடன் படிக்குமவர்க்கு மூவுலகும் வசமாகும். அவர்க்கு என்னென்ன இச்சைகள் தோன்றுகின்றனவோ அவ்வனைத்தும் நிறைவேறும்.

கீர்த்தனை செய்வோருக்கு, முன் பத்து தலைமுறையினரும்,
பின் பத்து தலைமுறையினரும், ஆயிரம் கோடி கல்பகாலத்துக்கும் நூறுகோடி கல்பகாலத்துக்கும் வைகுண்டத்தில் பகவானை அனுபவிப்பர்.

ஶ்ரீ ராம அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்திரத்தை படித்து பகவானது அருள் பெறுவோம்.