Tags

, , , ,

॥ विनायक लीला स्तुतिः ॥

|| விநாயக லீலா ஸ்துதி: ||

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥

आलिङ्गितं चारुरुचा मृगाक्ष्या सम्भोगलोलं मदविह्वलाङ्गम् ।
विघ्नौघविध्वंसनसक्तमेकं नमामि कान्तद्विरदाननं तम् ॥ १५॥ *

ஆலிங்கி³தம்ʼ சாருருசா ம்ருʼகா³க்ஷ்யா ஸம்போ⁴க³லோலம்ʼ மத³விஹ்வலாங்க³ம் |
விக்⁴னௌக⁴வித்⁴வம்ʼஸனஸக்தமேகம்ʼ நமாமி காந்தத்³விரதா³னனம்ʼ தம் || 15||

āliṅgitaṃ cārurucā mṛgākṣyā sambhogalolaṃ madavihvalāṅgam ।
vighnaughavidhvaṃsanasaktamekaṃ namāmi kāntadviradānanaṃ tam ॥ 15॥

चारुरुचा मृगाक्ष्या आलिङ्गितं – சாருருசா ம்ருʼகா³க்ஷ்யா ஆலிங்கி³தம்ʼ – அழகிய தோற்றமுடைய, மான் போன்ற விழியுடையவளால் அணைக்கப்பெற்றவரை,

सम्भोग-लोलं – ஸம்போ⁴க³-லோலம்ʼ – ( அந்த ) இன்பத்தில் ஆசையுடையவரை,

मद-विह्वल-अङ्गं – மத³-விஹ்வல-அங்க³ம்ʼ – மதஜலம் பட்டு நெகிழ்ந்த அங்கங்களுடையவரை,

विघ्न-औघ-विध्वंसन-सक्तं – விக்⁴ன-ஔக⁴-வித்⁴வம்ʼஸன-ஸக்தம்ʼ – வெள்ளம் போல் வரும் இடையூறுகளை ஒழிக்கத் திருவுள்ளம் கொண்டவரை,

एकं – ஏகம்ʼ – ( அப்படிப்பட்ட ) ஒரே தெய்வத்தை,

तं कान्त-द्वि-रद-आननं – தம்ʼ காந்த-த்³வி-ரத³-ஆனனம்ʼ – இரு தந்தங்களுடன் கூடிய மனம் கவரும் ( யானை ) முகமுடையவரை,

नमामि – நமாமி – வணங்குகிறேன்.

பொருள் :

அழகிய தோற்றமுடைய, மான் போன்ற விழியுடையவளால் அணைக்கப்பெற்றவரை, ( அந்த ) இன்பத்தில் ஆசையுடையவரை, மதஜலம் பட்டு நெகிழ்ந்த அங்கங்களுடையவரை, வெள்ளம் போல் வரும் இடையூறுகளை ஒழிக்கத் திருவுள்ளம் கொண்டவரை, ( அப்படிப்பட்ட ) ஒரே தெய்வத்தை, இரு தந்தங்களுடன் கூடிய மனம் கவரும் ( யானை ) முகமுடையவரை ( விநாயகரை ) வணங்குகிறேன். 15

சாருருசா ம்ருʼகா³க்ஷ்யா ஆலிங்கி³தம்ʼ – அழகு நிறைந்த தன் அன்னையால் ( பார்வதி ) அன்புடன் தழுவிக்கொள்ளப்பட்டவரை, என்று கொள்க. ம்ருʼகா³க்ஷி என்பது அம்பாளின் நாமம்.

ஸம்போ⁴க³-லோலம்ʼ – அன்னையால் நன்றாக செய்து தரப்படும் நைவேத்யத்திற்கு ( மோதகம் ) ஆசைப்படுபவரை, என்று கொள்க., போ⁴க³: – நைவேத்யம்.

மத³-விஹ்வல-அங்க³ம்ʼ – ( அன்னையின் அணைப்பாலும், மோதகத்தின் இனிமையாலும் ஏற்பட்ட ) ஆனந்தத்தால் உடலும் உள்ளமும் நெகிழ்ந்தவரை, என்று கொள்க.

இத்தகைய ஆனந்த நிலையில் இருக்கும் போது வணங்கினால், வெள்ளம் போல் வரும் இடையூறுகளை ஒழித்தருள்வார்.
இவையெல்லாம் பால லீலைகள்.

  • பாடபேதம் — कान्त > कान्तं ; காந்த > காந்தம்.